இறைவனைப் போற்றி பரவுபவர்கள், வாழ்த்துபவர்கள், உரிய தகுதிப்பாடுடன் நெறிமுறைகளுடன் திருக்கோயில் வழிபாடுகளை ஆற்றுபவர்கள் அர்ச்சகர் ஆவார்.  இதில் வயதோ, மொழியோ, குலமோ, சாதியோ, பாலோ தடையில்லை.  தகுதிப்பாடு ஆக உரிய பயிற்சியும், ஒழுக்க நெறிகளுமே ஒருவருக்கு  தேவை.  அந்தந்தக் கோயிலுக்குரிய பழக்க வழக்கங்களை ஒட்டி அவருடைய செயல்பாடுகள் அமையும்.