20 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூர், திண்டுக்கல், மதுரை என பல இடங்களில் அரசு தொடர்பான இந்து அறநிலைத் துறை வாயிலாக பலநூறு சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கு சிவ வேள்வி, ஆகம நெறி வழி பயிற்சி அளித்தவர்.

சென்னையில் தமிழ் வழிப்பாட்டு பயிற்சி மையம் என்ற அமைப்பின் வாயிலாக பலநூறு பேர்களுக்கு வாழ்வியல் சடங்குகள், குடமுழுக்கு, சிவதீக்கை சைவ அனுட்டானத்துடன் பயிற்சி கொடுத்தவர். இலங்கை, மலேயா, சிங்கப்பூர், மொரீசியஸ் என பல நாடுகளில் பயிற்சி அளித்தவர்.

தற்போது கடந்த 7 ஆண்டுகளாக தெய்வத் தமிழ் அறக்கட்டளை வாயிலாக SRM  பல்கலைக் கழகத்துடன் இணைந்து வடபழனியில் ஓராண்டு பட்டையப் பயிற்சி (பகுதி நேரம்) வகுப்புகள்  ‘அருட் சுனைஞர்’ என்ற பெயரில் நடத்தி வருபவர்.  உச்சநீதி மன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் நேர் நின்று உரிய பங்களிப்பை அளித்து உரிய நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தவர். சகாபிகம பண்டிதர், செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார்.

சைவ சமய வழிபாடு, வைணவ வழிபாடு மற்றும் பண்டிகைகள் தொடர்பான செந்தமிழ் பத்தடிகளை உருவாக்கி உலகளாவிய அளவில் செந்தமிழ் ஆகம நெறி பரவ வழிகாட்டியவர்.  அவர் தலைமையில் நாம் தலை எடுப்போம் மேலாம் தண்டமிழை தரணி எங்கும் கொண்டு செல்வோம்.