பூணூல் வேண்டுமா?

கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்

தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்

நீல மாமயில் ஆடு துறையனே

நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தார்கட்கே

என அப்பர் பூணூல் வேண்டாம் என்கிறார்.

ஆகமத்திலும் இதுபற்றி கூறப்படவில்லை.

இது திராவிட –  ஆரியக் கூட்டுக் கலாச்சாரத் தாக்கத்தால் பின்னால் வந்தது இதுவே சந்நியாசம் பெறும போது பூஜை துறக்கப்படுகிறது.  துறவு மெய்யுளர்வின் பாற்பட்டது.  ஆனால் மெய்யுணர்வு தீர்க்கையில் பெறுவது.

நூலும் சிகையும் நுவலிற் பிரமமோ

நுலது கார்ப்பாசம் நுண்சிசை கேசமாம்

— திருமூலர்

 

நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்

நூலுடை அந்தணர் காணும் நுவலிலே

ஆன்ம ஒளி மேலேறி இறைஒளியுடன் கூடுவது தான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர பூணூலில் ஒன்றும் இல்லை.

  • ஸ்ரீருத்ரம்

சிவனைப் பற்றியதல்ல.  ருத்ரர் கூட்டம் பற்றியது.  ருத்ரனைக் கொள்ளைக்காரன், கொலைகாரன், வழிப்பறி செய்பவன், மனிதர்களை இம்சை செய்பவனாகவே வர்ணிப்பதால் சிவவேள்விக்கும் ஸ்ரீருத்ரயஞ்சத்திற்கும் பெரிதும் வேறுபாடு உண்டு.  இப்படிச் சிவநிந்தை வேள்வி செய்வதில் தட்சன் முன்னோடியாக இருந்தான் என்றால் அவன் ஒரு ஆரியன் என்று ரிக்  வேதம் சான்று கூறுகிறது.  தக்கன் வேள்வியை சிவன் தகர்த்ததை மணிவாசகர் ஞான வெற்றி என்று கொண்டாடி உந்திப் பறந்தார்.