வழிபாட்டு நோக்கம்

அனைவரையும் வழிப்படுத்துவது நெறிப்படுத்துவது ஆகும்.  உலக ஆசைகளில், பற்றில் ஈடுபட்டிருக்கும் ஆன்மாக்களுக்கு மன சஞ்சலத்தோடு இருப்பவர்களுக்கு ஒரு போக்கிடம் காட்ட, பேரா இயற்கைப் பெரும் பொருளிடம் சேர, மன அமைதி பெற்று பிறப்பின் நோக்கத்தை ஈடேற்ற இறை வழிபாடு துணைபுரிகின்றது.  இதில் அர்ச்சகர் நடுநின்று தம் வழிபாடடுக் கிரியைகளின் வாயிலாக எண்ணத்தை ஈடேற்ற உதவுகிறார்.  ஒருவரின் மனோ சக்தி இறை சக்தியை உணர இதனுடன் ஒன்ற இணைய உதவுகிறார்.  இதற்கு உரிய வகையிலே அர்ச்சகர் தன்னை தகுதியாக்கம் செய்து கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அறம் – அன்பு – அருள் – தவம் –  சிவம்.  இதுதான் வழிமுறை.