செந்தமிழ் ஆகம அந்தணர்

20 ஆண்டுகளுக்கு முன்பாக மயிலாப்பூர், திண்டுக்கல், மதுரை என பல இடங்களில் அரசு தொடர்பான இந்து அறநிலைத் துறை வாயிலாக பலநூறு சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கு சிவ வேள்வி, ஆகம நெறி வழி பயிற்சி அளித்தவர்.

சென்னையில் தமிழ் வழிப்பாட்டு பயிற்சி மையம் என்ற அமைப்பின் வாயிலாக பலநூறு பேர்களுக்கு வாழ்வியல் சடங்குகள், குடமுழுக்கு, சிவதீக்கை சைவ அனுட்டானத்துடன் பயிற்சி கொடுத்தவர். இலங்கை, மலேயா, சிங்கப்பூர், மொரீசியஸ் என பல நாடுகளில் பயிற்சி அளித்தவர்.

தற்போது கடந்த 8 ஆண்டுகளாக தெய்வத் தமிழ் அறக்கட்டளை வாயிலாக SRM  பல்கலைக் கழகத்துடன் இணைந்து வடபழனியில் ஓராண்டு பட்டையப் பயிற்சி (பகுதி நேரம்) வகுப்புகள்  ‘அருட் சுனைஞர்’ என்ற பெயரில் நடத்தி வருபவர்.  உச்சநீதி மன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் நேர் நின்று உரிய பங்களிப்பை அளித்து உரிய நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தவர். சகாபிகம பண்டிதர், செந்தமிழ் வேள்விச் சதுரர், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆவார்.

சைவ சமய வழிபாடு, வைணவ வழிபாடு மற்றும் பண்டிகைகள் தொடர்பான செந்தமிழ் பத்தடிகளை உருவாக்கி உலகளாவிய அளவில் செந்தமிழ் ஆகம நெறி பரவ வழிகாட்டியவர்.  அவர் தலைமையில் நாம் தலை எடுப்போம் மேலாம் தண்டமிழை தரணி எங்கும் கொண்டு செல்வோம்.

 

விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form


சிவ சிவ

செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் எட்டு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 800 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.

தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு

(DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) / Tamil Archakar Course / தமிழ் அர்ச்சகர் படிப்பு

  • 9-ஆம் ஆண்டு (2019-2020) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. ஜூன் 2019-ல் வகுப்புகள் தொடக்கம்
  • பிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள், கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழி இரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்
  • தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி. ஆண், பெண் இருபாலாரும் சேரலாம். வயது வரம்பில்லை.
  • பட்டயப் படிப்பு இருபருவங்கட்கும் சேர்த்து கட்டணம் ரூ.4000/- மட்டுமே
  •  விண்ணப்பப் படிவம் – இங்கே பதிவிறக்கம் செய்க. Click here to Download Application Form

தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
தொலைபேசி: 9445103775 (பா.கந்தசாமி) 9444079926 / 9500045865 (மா.கருப்புசாமி) /
மின்னம்பலம் தொடர்பு:www.dheivamurasu.org / www.srmuniv.ac.in / editor@dheivathamizh.org

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  1. ஆதார் கார்டு நகல்
  2. கல்விச் சான்றிதழ் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)
  3. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  4. ரூ.4,000/-க்கு உண்டான காசோலை (DHEIVATHAMIZH ARAKKATTALAI என்ற பெயரில்) (இதில் பல்கலைக்கழக கட்டணம் ரூ.2000/- & புத்தகம் மற்றும் தேர்வுக்கட்டணம் ரூ.2000/- ஆகும்)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தெய்வத்தமிழ் அறக்கட்டளை,
9/1, மாஞ்சோலை முதல் தெரு, கலைமகள் நகர்,
ஈக்காட்டுத் தாங்கல், சென்னை – 600032.
தொலைபேசி: 9445103775 / 9444903286

ஏற்கெனவே  800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டயம் பெற்று செந்தமிழ் ஆகம அந்தணர்களாக இல்லச் சடங்குகளிலும், கோயில் பூசைகளிலும் களம் கண்டு வருகிறார்கள். கோயில்களில் தமிழே கொலுவிருக்க, வாழ்வியல் சடங்குகளில் வண்டமிழே வழிகாட்ட அரிதில் அமைந்துள்ள அருந்தமிழ் வாய்ப்பு! இப்பயிற்சியைப் பயன்கொள்ள விரையுங்கள்!