
ஆகம நூல்கள்
ஆகம முறை வழிபாட்டு முறை பத்ததிகள் – 18
ஆகம சார்பான தமிழ் நூல்கள் – 6
- திருமூலர் அருளிய திருமந்திரம்
- வாகீச முனிவர் அருளிய ஞானாமிர்தம் (கிரணாகமம்)
- மறை ஞானசம்பந்தரின் சைவசமய நெறி
- தத்துவப் பிரகாசரின் தத்துவப் பிரகாசம்
- மெமய்கண்ட சாத்திரங்கள் – 14
- துறைமங்கலம் சிவப்பிரகாசரின் சிவப்பிரகாச விகாசம்
இன்று அகோர சிவாச்சாரியார் பத்ததியே அதிகப் பயன்பாட்டில் உள்ளது.
- தமிழாகம திருமந்திரத்தில் ‘மகுடாகமம்’ என்ற இறுதி 9 ஆம் தந்திரத்தில் விரிவாகப் பேசப்படுகிறது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கடைசியாக மகுடாகம வழி சிதம்பரம் என்கிற தில்லை கோயிலில் குட நன்னீராட்டு நடைபெற்றுள்ளது. ஆனால் இன்று தில்லையில் நடப்பதோ சற்றும் தொடர்பில்லாத ‘பதஞ்சலி பத்ததி’ முறைகளே ஆகும்.
தமிழாகமத்தின் வழி செய்யப் பெற்ற குடமுழுக்கு செய்திகள் திருவாரூர் செப்பேடுகளில் உள்ளன.
திருக்கூத்து தரிசனம் என்று 5 கூத்து வகைகள் மற்றும் 82 பாடல்கள் கிடைக்கின்றன திருமந்திரத்தில்.
தில்லைப் பொதுவில் 3 விதமான வழிபாடுகள் உள்ளன.
அருவுருவ வழிபாடு – படிக இலிங்க வழபாடு
உருவ வழிபாடு – நடராசர் வழிபாடு
அருவ வழிபாடு -தில்லை ஆகாய வழிபாடு (சிதம்பர இரகசிய வழபாடு)