
ஐந்ததெழுத்தின் சிறப்பு
‘நமசிவய’ இதுதான் அடிப்படை பெருமந்திரம்
ந-நடப்பு- உயிர் உலகியல் நடப்பு வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கும்.
ம-மறைப்பு- அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப்படுகிறது.
சி-சிறப்பு- எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வ-வனப்பு- பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச் சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்புக் கொள்வதை குறித்தது.
ய-யாப்பு- அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையை தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப்படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.
‘பதத்தெழு அஞ்செழுத்து’ என்கிறார் அப்பர்.
- சடங்குகளில் சிறுபான்மை மந்திரம், பெரும்பான்மையாக வருவன செய்முறைகள். செய்முறைகளையே ஆகம பத்ததிகள் என்று கூறினர். செய்முறைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் கூறலாம்.
- திருமுறையே மந்திரங்கள்
கண்ட பெரு மந்திரமே மூவர் பாடல்
கை காணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்
– உமாபதி சிவம்