
அர்ச்சகர் தகுதிப்பாடு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது.
- அந்தணன் என்பது ஆவது – பிறப்பதல்ல
அந்தணன் என்பது குணத்தினால் வருவது.
- சைவ ஒழுகலாறுகளை உணர்ந்து சிவதீக்கை எடுத்து அகப் பூசையை தினந்தோறும் கடைப்பிடித்தல் சிவபூஜை செய்தல். சடங்குகளின் மெயத்தன்மை உணர்ந்து தகுந்த ஆச்சாரியர்களிடம் பயிற்சி பெறல். சமய நுட்பங்கள் ஆராய்ந்து அறிதல், வேதம் ஆகமம் பற்றி தெளிதல், பயிற்சி ஏற்றல், சமய வரலாறு, மந்திரங்கள், கோயில் மற்றும் திருமேனிகள், மூர்த்தங்கள், உரிய பூஜை முறைகள் இவற்றை அறிந்து செயலாற்றல். மந்திர வகைகள் அறிந்து, பயன்படுத்தி உணர்தல். சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்வாங்கி வேண்டுமிடத்தில் கடைப்பிடித்தல் என அது நீளுகிறது.
வெறும் சாமி அலங்காரத்துடன் நின்று விடாமல் காரணக்காரிய அறிவுடன் காலம், இடம் அறிந்து தக்கவர் துணை கொண்டு காரியம் ஆற்றுவது மிக முக்கியம்.
யாருக்கு யார் குரு:
அப்பூதியடிகள் என்ற பிராமண அந்தண அப்பர் என்னும் வேளாளரைக் குருவாக ஏற்றார். சுந்தரர் என்னும் ஆதி சைவர் திருஞான சம்பந்தர் என்னும் சுமார்த்தரையும், அப்பர் எனும் வேளாளரையும் குருவாக ஏற்றார். ஆதிசைவரான அருள் நந்தி சிவம் வேளாளரான மெய்கண்டாரிடம் தீக்கை பெறுகிறார். மறைஞானசம்பந்தர் எனும் வேளாளரிடம் உமாபதி தீட்சிதர் தீர்க்கை பெற்று சிவமாகிறார். குலம் பற்றி திட்டியதால் அருச்சனன் கண்ணப்பனாக பிறக்கிறான்.